உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தேனி எஸ்.எஸ்.ஐ அடித்துக் கொலை: 5 தனிப்படை அமைத்து 3 பேர் கைது; குடும்பத்திற்கு ரூ.40 லட்சம் நிதியுதவி: விஜய் அறிவிப்பு

தேனியில் பொதுச் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாகப் பட்டாசு வெடித்ததைத் தட்டிக்கேட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரைத் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே, உயிரிழந்த எஸ்.எஸ்.ஐ செந்தில்குமாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், ரூ.40 லட்சம் நிவாரண நிதி வழங்கிட உத்தரவிட்டுள்ளார். தேனி காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI) செந்தில்குமார், தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தீபாவளி பண்டிகை நா…