Indian Express Tamil
சொத்து மீது குவியும் கடன்கள்; சந்திரகலாவுக்கு செக் வைக்கும் கார்த்திக்: சாமுண்டீஸ்வரி மீண்டு வருவாரா?
கார்த்திகை தீபம்: சந்திரகலாவை சிக்க வைக்க கார்த்திக்கின் மாஸ்டர் பிளான்! கவலையில் சாமுண்டீஸ்வரி! ‘கார்த்திகை தீபம்’ சீரியலில், அடுத்தடுத்து நடக்கும் அதிரடி சம்பவங்கள் கதையை இன்னும் விறுவிறுப்பாக்கி வருகின்றன. கடந்த எபிசோடில் சேட் ஒருவரைச் சந்தித்துப் பேசிய கார்த்திக், சந்திரகலாவை எப்படியாவது சிக்க வைக்க ஒரு திட்டம் போட்டிருந்தார். அதன்படி, சொத்து தொடர்பான பத்திரங்களுடன் சந்திரகலாவின் வீட்டுக்குச் செல்கிறார் சேட். அங்கே, “சாமுண்டீஸ்வரி இந்தச் செங்கல் சூளையை அடமானம் வைத்து ஏற்கெனவே பெரிய தொகையைக் கடனாக வாங்கியிருக்கிறார். அந்தப் பணத்தை நீங்கள் திருப்பிக் கொடுத்தால்தான் இந்தச் சொத்து உங்களுக்குக…