Nakkheeran
சகித்துக்கொள்ளவே முடியாது; ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை வேண்டும்- இபிஎஸ் வலியுறுத்தல்
மாணவர்களின் அறிவுத் திறனை வளர்க்கும் இடமான நூலகத்தில் எந்த ஆட்சியில் தவறு நடந்தாலும் அதனைச் சகித்துக் கொள்ளவே முடியாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''கோவை பெரியார் அறிவுலகம் புத்தக கொள்முதல் விவகாரத்தில் உண்மை நிலவரத்தைக் கண்டறிய உடனடியாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு அமைத்து விரிவான நீதி விசாரணை நடத்த வேண்டும். மறுபுறம், தமிழகத்தில் இதுவரை 467 நிறுவனங்களுக்கு சீல் வைத்துள்ளதாகப் பெருமை பேசும் தற்போதைய அரசு, தன் மீதுள்ள இத்தகைய நிர்வாகக் குறைபாடு…