Maalaimalar
ராவல்பிண்டி டெஸ்ட்: இலங்கைக்கு எதிராக முதல் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 281/5
பாகிஸ்தான்- இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் அணி, தொடக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடியது. நான்கு வீரர்கள் அரைசதம் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் தய்யப் ஆரிஃப் சிறப்பாக விளையாடி 51 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். அசான் அவைஸ் 50 பந்துகளில் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்…