Indian Express Tamil
துணை சபாநாயகர் ரவிசங்கர் பதவியை உடனே பறிக்க வேண்டும்: கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகருமான ரவிசங்கர், தன் பகுதி குறைகளைத் தெரிவிக்க வந்த கார்த்திக் குமார் என்பவரையும் உடன் வந்த நிருபரையும் கண்மூடித்தனமாகத் தாக்கியதாகக் கூறப்படும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் கண்ணபிரான் காலனியைச் சேர்ந்த கார்த்திக் குமார், தனது பகுதியில் கடந்த ஒரு வார காலமாக குடிநீர் விநியோகம் சீராக இல்லை என்றும், குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கியுள்ளதாகவும் நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். இருப்பினும், நகராட்சி தரப்பில் எவ்வ…