Indian Express Tamil
முல்லை பெரியாறு அணையை காத்ததற்கு நன்றிக்கடன்; கே.எம்.அப்பாஸ் உடலை சுமந்து சென்ற வைகோ
மூத்த விவசாய சங்கத் தலைவரும், முல்லைப் பெரியாறு உரிமைப் போராளியுமான கே.எம். அப்பாஸ் (94) உடல்நலக் குறைவால் மரணமடைந்த நிலையில், அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவரது உடலை சுமந்து சென்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த மூத்த விவசாய சங்கத் தலைவர் கே.எம்.அப்பாஸ் (94). முல்லைப் பெரியாறு உரிமைப் போராளியான இவர், தென் மாவட்ட விவசாயிகளின் நலனுக்காகவும், அணை உரிமைகளுக்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர். தென் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையில், தமிழகத்தின் உர…