உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

துணை சபாநாயகர் ரவிசங்கருக்கு எதிராக விர்ச்சுவல் வாரியர்சும் போர்க்கொடி: 'நீங்களாக விலகாவிட்டால் ராஜினாமா செய்ய வைப்போம்' என எச்சரிக்கை

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் கண்ணபிரான் காலனியைச் சேர்ந்த கார்த்திக் குமார், தனது பகுதியில் கடந்த ஒரு வார காலமாக குடிநீர் விநியோகம் சீராக இல்லை என்றும், குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கியுள்ளதாகவும் நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். இருப்பினும், நகராட்சி தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தொகுதி சட்டமன்ற உறுப்பினரான துணை சபாநாயகர் ரவிசங்கரை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயன்றுள்ளார். ஆனால், அவர் அழைப்பை ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. தாக்குதல் தீபாவளி நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை அவசர வேலை காரணமாக மண்ணச்சநல்லூர் பகுதிக்கு வந்த கார்த்திக்குமார், அங்குள்ள துணை சபாநாயகரின…