Indian Express Tamil
திருச்சியில் பள்ளிப் புத்தகங்களை எடைக்குப் போட்ட தலைமை ஆசிரியை: சஸ்பெண்ட் செய்து கல்வி அலுவலர் நடவடிக்கை
அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட முதற்பருவப் பாடப்புத்தகங்களை, பழைய இரும்புக்கடைக்காரரை வரவழைத்து எடைக்கு விற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் திருச்சி கல்வி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தும்பலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 75-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். தமிழ்நாடு அரசின் திட்டத்தின்கீழ் இவர்களுக்கு விலையில்லாப் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு, முப்பருவ முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற…