Indian Express Tamil
சுதந்திர இந்தியாவின் முதல் தீபாவளி; காந்தி எப்படி கொண்டாட விரும்பினார்?
எழுதியவர்: அங்குர் பிப்லவ் சுதந்திர இந்தியாவின் முதல் தீபாவளிக்கு மூன்று நாட்களுக்கு முன்பு, மகாத்மா காந்தி அகதியாக இருந்த ஒரு பெண்ணின் கேள்விக்குப் பதிலளித்தார். துயரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மக்கள் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்பதே அந்தப் பெண்ணின் பரிந்துரையாக இருந்தது. ஆனால் காந்திஜி அதை ஏற்கவில்லை. ஆங்கிலத்தில் படிக்க: துயரத்தில் மூழ்கியுள்ள ஒரு குடும்பம், வழக்கமாக எந்தக் கொண்டாட்டங்களிலும் ஈடுபடாது. அங்ஙனமிருக்க, இடம்பெயர்ந்த மக்களின் துன்பத்தை ஏன் வேறொருவரின் சோகமாகக் கருத வேண்டும், அதைத் தன் சொந்தச் சோகமாகக் கருதக் கூடாது? “எல்லைகள் என்ற சுவரை உடைத்து எறியுங்கள், அப்போது இந்தியா ஒரே…