Indian Express Tamil
ஓசூர் அருகே விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் மரணம்: கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்தபோது நடந்த பரிதாபம்
ஓசூர் அருகே தனியார் நிறுவனத்தில் கழிவுநீர் சுத்திரிப்பு பணியின்போது விஷ வாயு தாக்கி 3 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு தனியார் நிறுவனத்தில், கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் வகையில், அமைக்கப்பட்டுள்ள நானோ- பில்ட்ரேஷன் பீட் டேங்க்' என்ற தொட்டியில் பராமரிப்பு பணிகள் மற்றும் சுத்தம் செய்யும் பணிக்காக 3 தொழிலாளர்கள் வந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இவர்கள், ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த வேலை செய்து வரும் நிலையில், மாலை 5 மணிக்கு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக இறங்கியுள்ளனர். அப்போ…