Indian Express Tamil
அன்பில் மகேஷ் கைது: த.வெ.க அரசை கண்டித்து திருச்சியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
தமிழக முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது சுமார் நூறு கோடிக்கு மேல் ஊழல் செய்ததாக கூறி த.வெ.க அரசு நேற்று கைது செய்து புழல் சிறையில் அடைத்தது. இதனை கண்டித்து திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆயில்மில் பகுதியில் உள்ள கலைஞரின் உருவ சிலை முன்பு திமுக முன்னாள் எம்எல்ஏ சேகரன் தலைமையில் தவெக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தற்போதைய த.வெ.க. அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கண்டித்தும், த.வெ.க. அரசு அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சியினர் மீது பொய…