உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

அர்னாப் புயல் எதிரொலி : சென்னையில் கடல் சீற்றம்!

அர்னாப் புயல் காரணமாக சென்னையில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது எண்ணூர் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், பாரதி நகர் பேருந்து நிறுத்தம் போன்ற பகுதிகளில் கடல் அலைகள் சுமார் 200 மீட்டர் தூரம் வரை ஆக்ரோஷமாக எழுந்து கரையைத் தாக்கி வருகின்றன. இதையடுத்து, 30-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், அப்பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. அதேபோல், கடல் சீற்றத்தைப் பொருட்படுத்தாமல் செல்ஃபி எடுக்க முயற்சிக்கும் பொதுமக்களை காவல்துறையினர் எச்சரித்து, அங்கிருந்து அப்புறப்படுத்தி வருகின…