உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

’துணை சபாநாயகர் விவகாரம்’; விசாரணை நடத்தத் தனிக் குழு அமைத்தது தமிழக அரசு!

திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், குடிநீர் தட்டுப்பாடு மற்றும் அடிப்படை வசதி குறைபாடுகள் குறித்து புகார் தெரிவிக்கச் சென்றபோது, தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான ரவி சங்கர் அவரை சரமாரியாகத்தாக்கியதாகக் கூறி ஒரு வீடியோ வெளியானது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைராலகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் ஒரு புதிய வீடியோ வெளியானது. அதில், பாதிக்கப்பட்ட கார்த்திக் தன்னை யாரும் தாக்கவில்லை என்றும், அந்த கூட்டத்தில் சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டுவிட்டது என்றும் அதனால், இந்த விவகாரத்தைப் பெரிதாகப் பொருட்படுத்த வேண்டாம் எனவும் தெர…