Nakkheeran
“ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம்” - தமிழக அரசு உத்தரவு!
தமிழ்நாடு அரசு இன்று (27.10.2026) வெளியிட்டுள்ள அரசாணையின்படி, சென்னை பெருநகர பகுதி மற்றும் மாநிலத்தின் இதர பகுதிகளில் இயக்கப்படும் ஒப்பந்தப் பயண ஆட்டோ ரிக்ஷாக்களுக்கான பயணக் கட்டணங்கள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, மாநில மற்றும் வட்டாரப் போக்குவரத்து அதிகார அமைப்புகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கி இந்த அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது. இப்புதிய கட்டண மாற்றத்தின்படி, ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச தூரம் 1.8 கிலோமீட்டராக நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான குறைந்தபட்ச கட்டணம் 50 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது. இந்த குறைந்தபட்ச தூரத்தைக் கடந்த பிறகு பய…