Indian Express Tamil
3 முறை திருமணம் செய்தது ஏன்? மனைவி அன்னாவைப் பிரியும் சூழலில் திருமண வாழ்க்கை குறித்து பவன் கல்யாண் விளக்கம்
ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாணும், அவரது மனைவி அன்னா லெஷ்னவாவும் 13 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் வாழ்க்கையின் கணிசமான பகுதியை ஒன்றாகப் பகிர்ந்துகொண்ட பிறகு, பரஸ்பர புரிதல் மற்றும் மரியாதையுடன் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளனர். மேலும் அந்த அறிக்கையில், "எங்கள் திருமணம் முடிவுக்கு வந்தபோதிலும், நாங்கள் நல்ல நண்பர்களாகவும், எங்கள் அருமையான குழந்தைகளுக்கு அர்ப்பணிப்புள்ள பெற்றோராகவும் தொடர்வோம். அவர்களின் மகிழ்ச்சியும் நல்வாழ்வும் எப்போதும் எங்கள…