Polimer News
கூட்டுறவு சங்க லாக்கரில் பாதுகாப்புக்காக வைத்திருந்த 50 சவரன் தங்க நகைகள் மாயம்..
நாகர்கோவில் மறவன்குடியிருப்பு கூட்டுறவு சங்க லாக்கரில் பாதுகாப்புக்காக பெண் ஒருவர் வைத்திருந்த 50 சவரன் தங்க நகைகள் மாயமானது தொடர்பாக கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், கூட்டுறவு சங்கத்தின் சிசிடிவி பதிவுகள் மாயமானதும் தெரியவந்துள்ளது. லாக்கரில் வைத்திருந்த நகைகளை ஜெய பிரியங்கா என்பவர் மீண்டும் வாங்க வந்தபோது, நகைகள் மாயமானது தெரிய வந்ததையடுத்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.