Polimer News
ஊரக வளர்ச்சித் துறை பணம் ரூ.22 கோடி திருடப்பட்டது எப்படி?
தமிழக ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் பராமரிக்கப்படும் வங்கி கணக்குகளில் இருந்து 22 கோடி ரூபாய் பணத்தை ஆன்லைன் முறையில் திருடிய கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி இணைந்து பரிவர்த்தனைகளுக்காக போர்டல் ஒன்றை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு அதிகாரிக்கும் நிதி பரிவர்த்தனை செய்வதற்காக லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் மூலமாக எச்.டி.எஃப்.சி வங்கி இந்த போர்டலை உருவாக்கிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த போர்ட்டலை ஹேக் செய்துதான் மர்ம நபர்கள் 22 கோடி ரூபாய் பணத்தை ஆன்லைன் முறையில் த…