உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

’ஓசூர் விவகாரம்; அனைத்து முன்னெச்சரிக்கைகளும் எடுக்கப்படும்’ - அமைச்சர் கீர்த்தனா உறுதி

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே வன்னியபுரத்தில் தனியாருக்குச் சொந்தமான செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிறுவனத்தில், கிட்டதட்ட 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில், நேற்று கழிவுநீர் சுத்திகரிப்பு பணியின் போது விஷவாயு தாக்கி மூன்று பேர் உயிர் இழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில், தருமபுரி மாவட்டம், பெல்ராம் பட்டியைச் சேர்ந்த சாரதிகுமார் (25), பஞ்சப்பள்ளி தின்னூரை சேர்ந்த அக்மல் பாபுபாய்…