Polimer News
குற்றங்கள் குறைந்து வருவதை காட்டவே ஒப்பீடு.. - அமைச்சர் ராஜ்மோகன்
பண்டிகை காலங்களில் ஏதோ புதிதாக கொலைகள் நடைபெறுவது போல் தற்போது பேசுவதாக தாம் குறிப்பிட்டது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டதாக அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார். கொலைகள் குறைந்து விட்டன என்ற புள்ளிவிவரம் மட்டுமே மக்களுக்கு ஆறுதல் தராது எனக் கூறிய அவர், காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.