Nakkheeran
டூரிங் டாக்கீஸ்!
ரியாலிட்டி ஷோ கவர்ச்சி! கவர்ச்சியான நடிப்பால் பிரபலமானவர் பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். நடிப்பைத் தாண்டி பொது இடங்களில் எதாவது வித்தியாசமாக செய்து பரபரப்பை ஏற்படுத்துவார். இவரை வைத்து ஒரு ரியாலிட்டி ஷோவை தனியார் தொலைக்காட்சி ஒருங்கிணைத்தது. குடும்ப கஷ்டத்தைக் கேட்டு தீர்த்து வைக்கிற ரியாலிட்டி ஷோ இது. இதில் கலந்துகொண்ட ஒருவரின் குடும்பத்தைப் பற்றி ராக்கி சாவந்த் கடுமையாக விமர்சனம் செய்ததால் அவர் நிகழ்ச்சி முடிந்ததும் தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனமுடைந்த அவரது பெற்றோர் ராக்கி சாவந்த் மீது வழக்கு தொடுத்தனர். நீதிமன்றம் விசாரணைக்கு அழைத்த போது பல நாட்களாக டிமிக்கி கொடுத்து வந்தவ ர…