உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

கேஸ் அடுப்பில் தீ ஒரு பக்கம் மட்டும் எரியுதா? இந்த 5 காரணங்களைத் தெரிஞ்சுக்கோங்க... வீட்டிலேயே சரிசெய்யலாம்

நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் அன்றாடம் அதிகம் பயன்படுத்தப்படும் சமையல் சாதனங்களில் கேஸ் அடுப்புக்கு முக்கிய இடம் உண்டு. காலையில் காபி, டீ தயாரிப்பது முதல் மதிய உணவு, இரவு சமையல் வரை ஒரு நாளில் பலமுறை கேஸ் அடுப்பைப் பயன்படுத்துகிறோம். இவ்வாறு தொடர்ந்து பயன்படுத்துவதால் அடுப்பில் அவ்வப்போது சில பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பானது. குறிப்பாக, சமையல் செய்யும்போது கவனக்குறைவால் பால் பொங்குவது, சாம்பார், குழம்பு வழிவது, எண்ணெய் சிதறுவது போன்றவற்றால் அடுப்பின் பர்னர் பகுதியில் அழுக்குகள் படிந்துவிடும். அடுப்பின் சூட்டில் இந்த உணவுப் பொருட்கள் காய்ந்து இறுகி, பர்னரில் உள்ள சிறிய துளைகளை அடைத்துக் கொள்ளும்.…