Samayam Tamil
34,000 சதுர அடியில் 6 மாடி மால்: முதல்வர் விஜய் போரூர் நிலத்தில் 3 தியேட்டர்கள் உடன் மெகா திட்டம்
தமிழக முதலமைச்சர் விஜய்க்கு சொந்தமான சென்னை போரூர் இடத்தில் மால் கட்ட முடிவு செய்துள்ளனர். அங்கு 33,949 சதுர அடி நிலம் இருக்கிறது. ஏற்கனவே 1,691 சதுர அடி நிலத்தை சாலை விரிவாக்க பணிகளுக்காக சென்னை மாநகராட்சி வசம் ஒப்படைத்து விட்டார். எஞ்சிய இடத்தில் பிரம்மாண்டமான மால் ஒன்று கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு அரசிடம் விஜய் தரப்பில் காய் நகர்த்தப்பட்டது. இந்த விஷயத்தை விஜய் சார்பில் அவரது பொது அதிகார முகவர் வெங்கட்ராமன் மேற்கொண்டார். இவர் ஆடிட்டராக செயல்பட்டு வந்த நிலையில், தற்போது உணவுத்துறை அமைச்சராக இருப்பது கவனிக்கத்தக்கது.