உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

’தி.மலை துயரச்சம்பவம்; ஒவ்வொரு குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம்’; முதல்வர் விஜய் அறிவிப்பு!

திருவண்ணாமலை மாவட்டம், ஆணாய்பிறந்தான் கிராமத்தில் இயங்கிவரும் தனியார் பெண் குழந்தைகள் காப்பகத்தின் செவிலியர் உட்பட 5 பேர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவியும் அறிவித்து உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ”திருவண்ணாமலை மாவட்டம், ஆணாய்பிறந்தான் கிராமத்தில் இயங்கிவரும் தனியார் பெண் குழந்தைகள் காப்பகத்தின் செவிலியர் செல்வி தேன்மொழி (22) மற்றும் அக்காப்பகத்தில்…