Nakkheeran
ஆரம்பகட்ட நிலையில் விசாரணை; அன்பில் மகேஷுக்கு ஜாமீன் மறுத்த நீதிமன்றம்
திமுக ஆட்சி காலத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதற்காக சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் பெற்றதாக ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் லஞ்சம் பெற வேண்டும் என்ற கடுமையான நிபந்தனையை ஏற்படுத்தி, நெருக்கமான ஆதரவாளர்கள் சிலர் மூலமாக கோடிக்கணக்கான ரூபாய்களை அவர் பெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த ஊழல் புகாரின் அடிப்படையில் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்தச் சூழலில் சென்னை ஊழல் தடுப்பு…