Indian Express Tamil
கரகாட்டக்காரன் சூப்பர் ஹிட், அர்ஜூன் படம் ஓடல...; வெற்றி தோல்வி குறித்து கங்கை அமரன் சொன்ன சீக்ரெட்
கரகாட்டக்காரன் திரைப்படம் எனக்கு பெரிய வெற்றியை கொடுத்திருந்தாலும் அடுத்து அர்ஜூன் நாயகனாக நடிக்க வைத்து நான் இயக்கிய படம் தோல்விப்படமாக அமைந்தது என்று இயக்குனர் கங்கை அமரன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் எவர் கிரீன் காமெடி காட்சிகள் நிறைந்த திரைப்படம் கரகாட்டக்காரன். இந்த படத்தின் கதையை தாண்டி இதில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் இன்றும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கவுண்டமணி – செந்தில் கூட்டணி இந்த படத்தில் பெரிய அளவில் காமெடி காட்சிகளை வொர்க்அவுட் செய்திருப்பார்கள். கரகாட்டக்காரன் 1989-ம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான படம். ராமராஜன் நாயகனாக நடித்திருந்த இந்த படத்தின் ம…