Polimer News
ஆம்புலன்ஸுக்கு டீசல் நிரப்புவதை தடுத்து தாக்குதல்.. தட்டிக்கேட்ட மேலாளரை தாக்கி தள்ளிய இளைஞர்கள்..!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே, ஆம்புலன்ஸுக்கு டீசல் நிரப்புவதை தடுத்ததோடு, பெட்ரோல் பங்க்கில் பணம் தராமல் ரகளையில் ஈடுபட்டு, மேலாளர் மற்றும் ஊழியர்களை தாக்கி தப்பியோடிய இளைஞர்களை, சி.சி.டி.வி உதவியுடன், போலீஸார் தேடிவருகின்றனர். அவசரமாக டீசல் நிரப்ப வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை மறித்த அந்த கும்பல், தங்களது இருசக்கர வாகனத்திற்கு முதலில் பெட்ரோல் போடுமாறு மிரட்டித் தாக்கியதோடு, தட்டிக்கேட்ட பங்க் மேலாளரைத் தாக்கி கீழே தள்ளியதால், அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.