Nakkheeran
4 மாணவிகள் உட்பட 5 பேர் உ@ரிழப்பு- ஏழை சிறுமிகள் என்பதால் அலட்சியமா?-அடுக்கடுக்காக எழும் கேள்விகள்
திருவண்ணாமலை பெரும்பாக்கம் சாலையில் ஆனாய்பிறந்தான் கிராமத்தில் 'டெரிடாஸ் ஹோம்' என்ற பெயரில் காப்பகம் பெரிய அளவில் உள்ளது. இது அரசு உதவி பெறும் இந்த காப்பகமாகும். மிகவும் வறுமையில் உள்ள குடும்பத்தினரின் குழந்தைகள், பெற்றோரை இழந்த குழந்தைகள், தாய் அல்லது தந்தையை இழந்த பெண் குழந்தைகள் என 300க்கும் மேற்பட்டோர் இந்த காப்பகத்தில் தங்கி படித்து வருகின்றனர். இதில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. இதனை செழியன் என்பவர் நடத்தி வருகிறார். தீபாவளியை முன்னிட்டு பெரும்பாலான பிள்ளைகள் தங்களது வீட்டுக்கும், உறவினர்கள் வீட்டுக்கு சென்றுள்ளனர். கடந்த நவம்பர் 9ஆம் தேதி வீட்டுக்கு சென…