Indian Express Tamil
தி.நகரில் இருந்து மெரினாவுக்கு வெறும் 12 நிமிடங்கள்தான்; மெட்ரோவில் வரப்போகும் அதிரடி மாற்றம்
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பொதுமக்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டத் திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலான 4-ஆம் வழித்தடத்தில் நடைபெற்று வரும் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. தியாகராய நகர் பனகல் பார்க்கில் இருந்து சுரங்கம் தோண்டத் தொடங்கிய ராட்சத இயந்திரம், நந்தனம் சந்திப்பைக் கடந்து தற்போது போட் கிளப் பகுதியை நோக்கி முன்னேறி வருகிறது. இந்த மாத இறுதிக்குள் போட் கிளப் நிலையத்தைச் சென்றடையும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவ…