உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

நெல்லை டூ திருச்செந்தூர்: கந்த சஷ்டி விழாவுக்கு 2 சிறப்பு ரயில்கள் இயக்கம்

தமிழகத்தின் புகழ்பெற்ற முருகன் திருத்தலங்களில் ஒன்றான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் கந்த சஷ்டி விழா சிறப்பிடம் பெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காகத் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தருகின்றனர். கந்த சஷ்டி விழாவின் சிறப்பு முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்து தேவர்களைக் காப்பாற்றிய நிகழ்வை நினைவுகூரும் வகையில் கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு வரும் பிரதமை திதியில் தொடங்கி ஆறு நாட்கள் இந்த விழா நடைபெறுகிறது. விழாவி…