உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

கிணற்றில் விழுந்து உயி@ழந்த இளைஞர்! இறுதி மரியாதையுடன் அடக்கம் செய்த போலீசார்

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் காவல் சரகம் மேற்பனைக்காடு கிழக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் கண்ணன் (எ) கருணாநிதி (43) சைனீஸ் உணவு மாஸ்டராக வெளி மாநிலங்களில் வேலை செய்த கருணாநிதி சிலரால் ஏமாற்றப்பட்டதால் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் தான் கடந்த மாதம் மேற்பனைக்காடு வடக்கு கிராமத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் கடந்த 7 ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த தகவல் கீரமங்கலம…