Hindu Tamil Thisai
நடுரோட்டில் சட்டையைப் பிடித்து இழுத்த காவல் ஆய்வாளருடன் மல்லுக்கட்டிய இளைஞர்
கடலூர்: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம் பாக்கத்தில் கடந்த 8-ம் தேதி இரு பெண்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பைச் சேர்ந்த ஆண்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அது வாக்குவாதமாக மாறி மோதல் உருவானது. தகவலறிந்த நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் வேலுமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தலைமைக்காவலர் அமிர்தராஜ் ஆகியோர் நேரில் விசாரணைக்கு சென்றனர். அப்போது 3 பேரை போலீஸார் விசாரணைக்காக போலீஸ் ஜீப்பில்…