Polimer News
சமயபுரம் அருகே இரு சிறுவர்கள் கொலை.. ஒரே சிறுமியை காதலித்ததால் விபரீதம்.. 6 பேர் கைது..!
திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே தீபாவளி பண்டிகை அன்று நள்ளிரவில் இரண்டு சிறுவர்கள் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆறு பேரில் ஒருவரை காலில் சுட்டு போலீசார் கைது செய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஷ் தெரிவித்துள்ளார். கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பறிமுதல் செய்ய முயன்ற போது புதரில் பதுக்கி வைத்திருந்த அரிவாளை எடுத்து தாக்க முயன்றதால் சிவநேசன் என்ற நபரை காலில் சுட்டுப் பிடித்ததாக அவர் கூறியுள்ளார். கொலை சம்பவத்தின் பின்னணியில் ஒரே சிறுமியை இருவர் காதலித்ததே காரணம் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்ததாக டோங்கரே பிரவின்…