Daily Thanthi
பவன் கல்யாண் விவாகரத்துக்கு மத்தியில் இரண்டாவது மனைவி கூறிய கருத்து மீண்டும் வைரல்
ஆந்திர மாநில துணை முதல்-அமைச்சரும், நடிகருமான பவன் கல்யாணின் முன்னாள் மனைவி ரேணு தேசாய், மறுமணம் குறித்து தனக்கு எதிராக எழுந்த விமர்சனங்களுக்கு முன்பு அளித்த பதில் தற்போது மீண்டும் பேசுபொருளாகி உள்ளது.தெலுங்கு நடிகரான பவன் கல்யாண், நடிகை ரேணு தேசாயை கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2012-ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்…