Vikatan
திருவண்ணாமலை: மாயமான 3 மாணவிகளுக்கு என்ன நேர்ந்தது? தீவிர தேடுதலில் போலீஸ்
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்துள்ள தரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் 15 வயது மகள், தண்டராம்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவரின் இளைய மகளுக்கு 14 வயதாகிறது. அவரும் அதே பள்ளியில் 9-ம் வகுப்புப் பயில்கிறார். தாய் - தந்தை இருவரும் கேரளாவில் கிணறு வெட்டும் வேலை செய்வதால் 2 மகள்களும் பாட்டியின் அரவணைப்பில் இருந்தனர். இவர்களுடன், இவர்களின் அத்தை…