Indian Express Tamil
சீன உளவாளியுடன் தொடர்பு... திருமணத்தை மீறிய உறவு; என்விடியா தலைமை பதவிக்கு ஆபத்தா?
செய்தி: ராய்ட்டர்ஸ் சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் பெண் உள்ளிட்ட இருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, என்விடியா (Nvidia) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) ஜென்சன் ஹுவாங்கை பதவியிலிருந்து நீக்க அந்நிறுவனத்தின் இயக்குநர் குழு தயாராகி வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து நன்கு அறிந்தவர்களை மேற்கோள் காட்டி இந்தச் செய்தி வெளியாகியுள்ளது. ஜென்சன் ஹுவாங்கின் எதிர்காலம் குறித்து முடிவெடுப்பதற்காக இயக்குநர் குழு புதன்கிழமையே கூட்டத்தை நடத்தத் தயாராகி வருவதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள…