கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கம்
கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரள உள்ளனர். இதற்காக 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. முக்கிய திருவிழாக்களில் ஒன்றான கந்தசஷ்டி திருவிழா நேற்று…