செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் சிபிசிஐடி டிஐஜி விசாரணை
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி ஊராட்சி நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த அக்டோபர் 11-ம் தேதி பிறந்த நாளை கொண்டாடிவிட்டு பெற்றோருடன் உறங்கினார். பின்னர் மறுநாள் காலை 3 மணி அளவில் சிறுமியை காணவில்லை. இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். எஸ்பி மதிவாணன் மேற்பார்வையில் 8 தனிப் படைகள் அமைக்கப்பட்டு சிறுமியை தேடும் பணி தீவிரப்…