Hindu Tamil Thisai
சீனா ஊடுருவியதாக போலி வீடியோவை பரப்பியதற்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்: கிரண் ரிஜிஜு
புதுடெல்லி: அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகள் சீனாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் கூறுவது போன்ற வீடியோவை காங்கிரஸ் மூத்த தலைவர் ரிது சவுத்ரி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். அதோடு அவர் வெளியிட்ட பதிவில், “வெட்கக்கேடு; அருணாச்சல பிரதேசத்தில் உள்ள அசாஃபிலா, லாங்ஜு மற்றும் டக்சிங் ஆகிய பகுதிகளை சீனா கைப்பற்றிவிட்டதாக லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷ் காலியா கூறுகிறார்…