Indian Express Tamil
கோவை கைதி தப்பியதால் மூடப்பட்ட பெட்ரோல் பங்க், டீ கடை: வழக்கம் போல் தொடங்கிய விற்பனை
கைதிகள் தப்பியோடிய சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சிறைத்துறை சார்பிலான பெட்ரோல் பங்குகள், அங்காடிகள் மற்றும் தேநீர் கடைகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, கோவை காந்திபுரத்தில் செயல்பட்டு வந்த சிறைத்துறை பெட்ரோல் பங்க் மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாதுகாப்பு நடைமுறைகளைக் கருத்தில் கொண்டு, சிறைவாசிகளுக்குப் பதிலாகத் தற்போது தற்காலிகமாகத் தனியார் ஊழியர்களைக் கொண்டு பெட்ரோல் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் கோவை வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ…