உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

அரிசி, பருப்பு, எண்ணெய், வெங்காயம்; கையிருப்பு வரம்பு விதிக்க மத்திய அரசிடம் அனுமதி கோரும் தமிழகம்

தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் சில்லறை விலைகள் பல தேசிய சராசரியைவிட அதிகமாக உள்ள நிலையில், அவற்றைப் பதுக்குவதையும் கள்ளச்சந்தை விற்பனையையும் கட்டுப்படுத்த அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், வெங்காயம் ஆகியவற்றின் கையிருப்புக்கு வரம்பு விதிக்க மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி கோரியுள்ளது. வணிகர்கள் மற்றும் சந்தையில் ஈடுபடும் பிற தரப்பினர் ஒரு பொருளை அதிகபட்சமாக எவ்வளவு அளவு கையிருப்பில் வைத்திருக்கலாம் என்பதை நிர்ணயிப்பதே கையிருப்பு வரம்பு ஆகும். அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 1955-ன் பிரிவு 3-ன் கீழ் மத்திய அரசு பொதுவாக இத்தகைய வரம்புகளை விதிக்கிறது. தற்போது குறிப்பிட்டுள்ள பொருட்களுக்கு…