Indian Express Tamil
மோடியை புகழ்ந்து தள்ளிய காங்., அயலக அணித் தலைவர்: உடனே பிரதமர் கொடுத்த ரியாக்சன்
தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் அயலக அணித் தலைவர் சாம் பிட்ரோடாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்துள்ளார். தனிப்பட்ட முறையில் மோடியுடன் நல்ல நட்புறவு இருப்பதாகவும், அவரது சித்தாந்தத்துடன் தனக்கு கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் சாம் பிட்ரோடா கூறியிருந்த நிலையில், இந்தப் பரிமாற்றம் கவனம் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் அயலக அணித் தலைவர் சாம் பிட்ரோடா, பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி பல்வேறு பாராட்டுகளைத் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் வியாழக்கிழமை பிரதமர் மோடி அவருக்குத் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார். ஊடகங்களிடம் பேசிய சாம் பிட்ரோடா, மோடியைத் தன…