உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

“ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்”...! மின்கம்பத்தில் ஏறி பெண்கள் அசத்தல்

கோவை டாடாபாத்தில் தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சார்பில் மின் கம்பத்தில் ஏறுவது உள்ளிட்ட பணிகளை செய்வதற்கான களப்பணியாளர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல் தகுதித் தேர்வு நடந்தது. அபாயகரமான மற்றும் சவாலான மின் களப்பணியில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பவானி அருகே ஆப்பக்கூடல் ஊத்துப்பூண்டியைச் சேர்ந்த பெண் ஒருவர், பிறந்து ஒரு மாதமே ஆன தனது குழந்தையை கணவர் மற்றும் தாயிடம் ஒப்படைத்து விட்டு மின்ம்கம்பம் ஏறும் தேர்வில் பங்கேற்றார். மின் கம்பத்தில் ஏறும் போது தவறி விழுந்தால் அடிபட்டு விடக்கூடாது என்பதற்காக அந்த இடத்தை சுற்றி தேங்காய் நார்களை பரப்பி பாதுகாப…