Nakkheeran
’இழப்பீடு தராததால் ஆத்திரம்’; பொக்லைன் கொண்டு அரசு அலுவலகத்தை இடித்த நபர்
இழப்பீடு தராததால் ஆத்திரமடைந்த ஒரு நபர், பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு அரசு அலுவலகங்களை இடித்துத் தகர்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள சியான் நகரில் உள்ள அரசு அலுவலகக் கட்டடத்தில், கடந்த திங்கள்கிழமை அன்று பிற்பகல் நேரத்தில் ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்திருந்தனர். அப்போது, 47 வயதான 'ஹு' என்ற நபர், பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு அக்கட்டடத்தின் முகப்புப் பகுதி, படிக்கட்டுகள், கண்ணாடிக் கதவுகள் மற்றும் பதாகைகள் உள்ளிட்டவற்றைத் தாக்கி சேதப்படுத்தினார். இந்தத் தாக்குதல் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. எனினும், உடனடியாக அங்கிருந்த ஊழியர்களும், பொதும…