Indian Express Tamil
9 ஆடுகளங்கள், 12 பயிற்சியாளர்கள்... வங்கதேசத்திற்கு எதிராக 'சென்னை' மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி தயாரானது எப்படி?
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. மிர்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, சில்ஹெட்டில் நடந்த 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மோசமான வெளிச்சம் காரணமாக நிறுத்தப்பட்டு, டிராவில் முடிந்தது. இதனால், தொடரை 1-0 என்கிற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் வென்று அசத்தியது. அந்த அணியின் இந்த வெற்றிக்கு சென்னை மண்ணில் அவர்கள் மேற்கொண்ட பயிற்சி என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது. அவர்கள் சென்னையில் உள்ள சி.எஸ்.கே-வின் உயர் செயல்திறன் மையத்தில் (எச்.பி.சி) பயிற்சி மேற்கொண…