Nakkheeran
"என் தாய்க்கு முழு உரிமை உண்டு!"-சுயசரிதையால் வெடித்த எதிர்ப்புக்கு பிரியங்கா காந்தி பதிலடி
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி எழுதியுள்ள ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ என்ற சுயசரிதைப் புத்தகம், இந்திய அரசியல் களத்தில் அனலைக் கிளப்பியுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய இத்தாலியில் தனது குழந்தைப் பருவம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராஜீவ் காந்தியைச் சந்தித்தது, இந்தியாவிற்கு வந்த பிறகான வாழ்க்கை எனப் பல சுவாரஸ்யமான நினைவுகளை அவர் பகிர்ந்துள்ள அந்த புத்தகம், தற்போது பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி மோதலாக உருவெடுத்துள்ளது. நேரு-காந்தி குடும்பத்தினர் செய்த தவறுகளை மறைத்து, அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கும் நோக்கத்தில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருப்பதாக பாஜக தலைவர்கள் கட…