பாதிப் படுக்கைக்கு முழுக் கட்டணம்... ஆர்.ஏ.சி. முறையை ரத்து செய்ய ரெயில்வே திட்டம்!
புதுடெல்லி, ரெயில்களில் பாதிப் படுக்கை வசதியை மட்டுமே வழங்கும் ஆர்.ஏ.சி. (RAC) பயணச்சீட்டுக்கு முழுக் கட்டணம் வசூலிக்கும் நடைமுறைக்கு எதிர்ப்புகள் வலுத்துள்ள நிலையில், இந்த முறையை ரத்து செய்வது அல்லது மாற்றியமைப்பது குறித்து இந்திய ரெயில்வே பரிசீலித்து வருகிறது. ஒரே படுக்கையை பகிர்ந்து கொள்ளும் 2 பயணிகள் ரெயில்களில் அனைத்து படுக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டால், மற்ற பயணிகளுக்கு ஆர்.ஏ.சி. முறையில் இருக்கை ஒதுக்கப்படுகிறது…