Nakkheeran
செம்மரக்கட்டைகள் கடத்த முயற்சி; அதிரடி ஆக்ஷன் எடுத்த போலீஸ்!
ராணிப்பேட்டை மாவட்டம் நீலகண்டராயப்பேட்டை காப்புக்காடு பகுதியில் செம்மரக்கட்டைகள் வெட்டி காரில் கடத்தப்படுவதாக ராணிப்பேட்டை வனச்சரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் வனத்துறை அதிகாரி சரவணபாபு தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது காப்புக்காடு பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக செம்மரக்கட்டைகளை வெட்டி காரில் கடத்த முயன்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட ராமகிருஷ்ணன் (39), தேவேந்திரன் (41), பாக்யராஜ் (35) ஆகிய மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் அரை டன் எடை கொண்ட 7 செம்மரக்கட்டைகள் மற்றும் கடத்தலுக்கு ப…