Nakkheeran
விளையாட்டுகள் மூலம் திறமைகளை வெளிப்படுத்தி அசத்திய மாற்றுத்திறனாளி மாணவர்கள்!
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. ராணிப்பேட்டை பாரதி நகர் பகுதியிலுள்ள தனியார் பள்ளி மைதானத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் நடந்த நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியர் முனைவர் ப்ரியா ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார். அவருக்கு மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, விளையா…