வீரமணி போக்சோ வழக்கில் 720 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்: அருண் ஐ.பி.எஸ் உட்பட 7 போலீஸ் அதிகாரிகள் பெயர் சேர்ப்பு
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:- வீரமணி மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு (CCB) குற்ற எண் 174/2025-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற வழக்குகளை விசாரிப்பதற்காக, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் (DGP/HoPF) அவர்களால் 24.09.2026 அன்று, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் மேற்பார்வையில் சிறப்புப் புலனாய்வுக் குழு (Special Investigation Team) அமைக்கப்பட்டது. சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்ட பின்னர், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது தாயார் அளித்த புகார…