Nakkheeran
தொடரும் வழிப்பறி சம்பவங்கள்; கிளுகிளு சாட்டிங் ஆஃப் களில் சிக்க வேண்டாம் என எச்சரிக்கை!
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகில் உள்ள மனக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. இவர் மறமடக்கி சுற்றவட்டார பகுதியில் விறகு வாங்கி வெளியூர்களுக்கு அனுப்பி வருகிறார். நேற்று புதன் கிழமை ஒரு லாரி விறகு ஏற்றி அனுப்பிவிட்டு வீட்டிற்கு சென்றவரின் செல்போனுக்கு வந்த அழைப்பில், ‘குளமங்கலத்தில் இருந்து பேசுறேன். ஒரு லோடு விறகு இருக்கு உடனே கொஞ்சம் பணம் வேண்டும்’ என்று பேசியுள்ளார். அந்த அழைப்பை அடுத்து பிரபு ஆலங்குடியில் இருந்து இரவு 8.30 மணிக்கு தனது பைக்கிள் மறமடக்கிக்கு திரும்பி வந்துள்ளார். பிரபுவை பரவாக்கோட்டை சாலையில் நின்ற 4 பேர் வழிமறித்து தாக்கி, பைக் சாவி, செல்போனை பறித்துக் கொண்டு ஜி-…